கோபா குழுவின் தலைவராக கபீர் ஹஷிம்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கான குறித்த குழு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் தலைவராக செய்யப்பட்டுள்ளார்.