கோதுமை மா விலை தொடர்பான அறிவித்தல்

கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கோதுமை மாவின் விலை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இது இடம்பெற்றது.

கடந்த 01 ஆம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மாவின் விலைகளை அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான விலை அதிகரிப்பை இன்று அறிவிக்கவுள்ளதாக கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகார சபையுடனான இந்த வார கலந்துரையாடலில், மாவின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களை நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என வர்த்தகஇ வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோதுமை விதைகளை இறக்குமதி செய்து இலங்கையில் பயிரிட அரசாங்கம் தலையிட்டால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை, என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர் சட்டத்தரணி திஷான் தர்மசேன தெரிவித்துள்ளார்.