கோணேசர் கோயிலுக்கு சந்தணம் வழங்கிய ஆலயத்தின் வேள்வி
-மூதூர் நிருபர்-
திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சந்தனத்தை வழங்கிய பெருமையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க மூதூர் – கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது முதலில் அம்மச்சியம்மனுக்கு பூஜைகள் இடம்பெற்றது.இதன் பின்னர் மாரியம்மன், வீரபத்திரனுக்கான பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.அத்தோடு சாமியாட்டமானது பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இறுதியாக பக்த அடியார்கள் தீ மிதித்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிய பின்னர் வேள்விச் சடங்கானது நிறைவடைந்தது.
வேள்வி சடங்களில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.