
கோட்ட கோகமாவின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி விமானத்தில் வைத்து கைது
காலி முகத்திடல் போராட்ட தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி செவ்வாய்கிழமை மாலை துபாய்க்கு விமானத்தில் செல்ல முற்பட்ட போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் கடந்த ஜூலை 13 ஆம் திகதி நுழைந்ததாகவும், அன்று ஒளிபரப்புகளை சீர்குலைக்க முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விமானத்திற்குள் இருந்தபோது சந்தேக நபரை கைது செய்து கொண்டு செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.