கோட்டா கோ கமவில் சிகை அலங்கார நிலையம் திறந்து வைப்பு

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கமவில், வைத்திய நிலையம், நூலகம், சட்ட உதவி மையம், மின்னுற்பத்தி நிலையம் மற்றும் சர்வதேச ஊடக மத்திய நிலையம் போன்ற பல்வேறு வசதிகள் காணப்படுகின்ற நிலையில், தற்போது சிகை அலங்கரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரை மாதங்களாக கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இங்கு இலவசமாக சிகை அலங்காரத்தை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.