கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்த்தப்பட்டது என்பதை சஜித் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்!

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை இராஜினாமா  செய்துள்ளார்

பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்தார்.

ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக் கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டுள்ளார்.

சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்று அது அமைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்த்தப்பட்டது என்பதை சஜித் அறிய முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்