கோட்டாய ராஜபக்ஷ நாடு திரும்புவதில் எமது பங்கு எதுவும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்சவின் வருகை குறித்து சிஎன்என் செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நாடு திரும்புவதால் எங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியபடி பயணம் செய்யலாம்’ என்று தெரிவித்துள்ளார்.