
கோட்டாபய மற்றும் பசில் நாட்டை விட்டு வெளியேற உதவவில்லை : இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுப்பு
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஇ மற்றும் அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா வசதிகளை செய்து கொடுத்ததாக வெளியான ஊடகத் தகவல்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் அடிப்படையற்றது என்றும் இலங்கை மக்களின் அபிலாஷைகளை அறிந்து ஜனநாயக வழிகளில் இலங்கை மக்களுக்கு உதவியளிக்கவுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
