
கொஹுவல துப்பாக்கிச் சூடு – சிகிச்சைப் பெற்று வந்த யுவதி பலி!
கொஹுவல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி நுகேகொடை சந்திக்கும் கொஹுவல சந்திக்கும் இடையில், மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
