கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆபத்தா? : விசேட வைத்திய நிபுணரின் அறிக்கை

கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்ட மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் பல்வேறு நோய்கள் தாக்கும் என்று பரவலாக ஒரு கருத்து பேசப்படுகின்றது.

இது குறித்து வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

கொவிட் தடுப்பூசியைப் பெற்ற பலருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பல்வேறு கோளாறுகள் உருவாகும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் அத்தகைய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறு ஒரு விடயம் எந்த மருத்துவ அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை

தடுப்பூசி ஒரு வைரஸ், தொற்று அல்லது நோய்க்கு எதிராக போராட உடலை தயார்படுத்துகிறது,  என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க