கொழும்பு மாவட்டத்தில் காணி பெறுமதி அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் காணி பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இது 11.4% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் குடியிருப்பு காணிக்கான பெறுமதி 14.45 வரை அதிகரித்துள்ளது.
வர்த்தகம் தொடர்பான காணிகளுக்கான பெறுமதி 11.5 %ஆகவும் , கைத்தொழில் துறைசார்ந்த காணிகளுக்கான பெறுமதி 8.4 %ஆகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
