உள்நாட்டு மூலதனச் சந்தையின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சர்வதேச ரீதியிலான போட்டித் தன்மை என்பனவற்றை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் , கொழும்பு பங்குச் சந்தை புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனைக்கான மத்தியக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையினை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனச் சந்தைக்குப் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், எதிர்பார்த்த இலக்கினை அடையவில்லை என இலங்கை பரிவர்தனை ஆணைக்குழுவின் தலைவர் ஹரீந்திர திசபண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.