கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல்

பிரான்ஸ் கடற்படைக் கப்பலான ‘பியூடெம்ப்ஸ் பியூப்ரே’ உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

குறித்த கப்பலானது 80.65 மீற்றர் நீளமும், மொத்தம் 58 அங்கத்தவர்களை கொண்டதாகும்.

கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் பெர்தியோ டிமிட்ரி பணியாற்றுகிறார்.

கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் குழுவினர்கள், தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்திய பின்னர், நீரியல் வரைபட சேவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துறையாடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி அன்று கப்பலானது நாட்டை விட்டு புறப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க