கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், கொள்கலன் ஒன்றை வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், பிரைம் மூவர் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கொழும்பு துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெடிகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் கிரேன் இயக்குநர் (Crane Operator ) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.