கொழும்பு–திருகோணமலை பிரதான வீதியில் 5 வாகனங்கள் மோதி விபத்து!
கொழும்பு திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மேலும், கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்கள் எதிர் திசையில் சென்ற லொறி மற்றும் கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.