
கொழும்பு – திருகோணமலை இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் ரத்து
கொழும்பு – திருகோணமலை இரவு நேர 2 அஞ்சல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை இரவு நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விபத்தின் போது 17 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயில் தடம்புரண்டதில் இரு ரயில் கட்டுப்பாட்டாளர்களும் 15 பயணிகளும் காயமடைந்துள்ளனர்.
குறித்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.