கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்து விசாரணை
கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி முதல் இன்று திங்கட்கிழமை அதிகாலை 06.00 வரை கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்ற வைத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து வைத்திய பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதனால், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.