கொழும்பு – குருணாகல் வீதியில் விபத்து: ஒருவர் பலி , ஒருவர் காயம்

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பொல்கஹவளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பொல்கஹவளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கார் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்