கொழும்பு – கல்கிஸ்ஸை பகுதியில் மோதல் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – கல்கிஸ்ஸை, அரலிய நிவாச பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
கல்கிஸ்ஸை காவல்துறையினரின் தகவலின்படி, கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் , இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் லுனாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இறந்தவர் அங்குலானாவைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார்.
காயமடைந்த மற்றொரு நபர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.