
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: இருவர் பலி
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அம்பேபுஸ்ஸ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தெல்தோட்டை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் பயணித்த 29 மற்றும் 47 வயதுடையவர்களே இதன் போது உயிர் இழந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.