கொழும்பில் மினி சூறாவளி ஐவர் படுகாயம்-வீடியோ இணைப்பு –

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் கடுமையான வானிலை நிலவியது, பலத்த காற்று மற்றும் கனமழையால் நகரம் முழுவதும் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் ஏற்படடுள்ளன.

பொரளை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, தெமட்டகொட, மருதானை, ஜாவத்தை மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில், சாலைகளைத் தடுக்கும் மரங்கள் முறிந்து விழுந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரங்கள் விழுந்ததில் ஐந்து பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த அனார்த்தத்தினால் ஏற்பட்ட மேலதிக பாதிப்புகள் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை