கொழும்பில் போலி பெண் பொலிஸ் அதிகாரி கைது

புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் அவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் போலியான பொலிஸ் சீருடை அணிந்திருந்ததாகவும், மர ஆயுதத்தை ஒத்த கைத்துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.