கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது
159ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாளை (3) பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
இதற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் விசேட போக்குவரத்துத் திட்டத்தை அமுல்ப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள தும்முல்ல சந்திப்பிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரை ஹேவ்லாக் வீதியில் பயணிக்கவிருப்போருக்காக இந்த விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்துக்கு எதிரே உள்ள கொழும்பின் வெளியேறும் வீதியில் நிறுவப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் நாளை பிற்பகல் 02.30 முதல்இரவு 07.00 மணி வரை ஹேவ்லாக் மார்க்கத்தில் உள்ள-பொன்சேகா வீதியின் சந்தியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் தும்முல்ல சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையான ஹேவ்லாக் வீதியில் கனரக வாகனப் போக்குவரத்து (கொள்கலன் ஊர்திகள் மற்றும் டிப்பர் லொறிகள்) நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 700 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
