
கொழும்பில் துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை சாவடியில் வாகனத்தை நிறுத்தி சோதனை செயவதற்கு முற்பட்ட நிலையில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரை சோதனை செய்தபோது, சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
