கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

பொரளை – ஆனந்தராஜகருணா மாவத்தையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஆனந்தராஜகருணா மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.