
கொழும்பில் சூடு: ஒருவர் காயம்
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்வத்த பகுதியை சேர்ந்த 48 வயதுடைய போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் மீதே இந்த துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் வீட்டை விட்டு வெளியே வருமாறு தொலைபேசியில் குறித்த நபரை அழைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
இதன் போது காயமடைந்தவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
