கொழும்பில் சகோதரர்கள் கொலை
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள் இன்று சனிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக, கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் ,இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.