
கொழும்பில் காற்றின் தரம் குறைவு!
கொழும்பைத் தவிர பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
இன்று காலை 06.00 மணி நிலவரப்படி, கொழும்பில் காற்றின் தரக் குறியீடு 96க்கும் 106க்கும் இடையில் இருந்தது.
மற்ற பகுதிகளில் இன்று காற்றின் தரக் குறியீடு 44 முதல் 106 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் நுவரெலியாவில் காற்றின் தரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
