
கொழும்பில் இருந்து பசறை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து : ஐவர் காயம்
-பதுளை நிருபர்-
பேருந்து விபத்தில் 6 வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம் அடைந்து, பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், ஐவர் படுகாயம் அடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படல்கும்பரை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தாயும், 6 வயதுடைய மகனும், எல்டப், கோணக்கலை, பசறை, டெமேரியா பகுதியை சேர்ந்த 27,38,48 வயதுடைய மூவரும் என 5 பேர் இவ்வாறு காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து விபத்து இடம்பெறும் போது, பேருந்தில் சுமார் 15 பேரிற்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், ஏனையோருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தை நடத்துனரே செலுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
