கொழும்பில் இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு கண்டனம்
-யாழ் நிருபர்-
நேற்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டக்காரர்களும் ஊடகவியலாளர்களும் இராணுவம் மற்றும் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபனேசன் தெரிவித்தார்.
இன்று பிரதேச சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்கள், நாட்டில் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் பிரச்சினை, பஞ்சம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக நேற்றிரவு ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்பாக ஜனநாயக ரீதியில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதன்போது மக்களும் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமாது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக கூறிக்கொண்டு நாட்டினை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியுள்ளது இந்த அரசு.
எனவே அரசு தமது பதவிகளை விட்டு விலகி ஆட்சியை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்றார்.