கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்!

-மன்னார் நிருபர்-

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.

பறையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.