கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லலாம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையிலான தனது விமானச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இதன்படி ஜனவரி 6 முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று புதிய பகல்நேர விமான சேவைகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் உலகளாவிய வலையமைப்பிற்கும் இடையிலான வான்வழித் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விமான சேவையானது வாரத்தின் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய இணைப்புகளுடன், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு மொத்தமாக 10 விமான சேவைகளை முன்னெடுக்கின்றது.

இந்த விரிவாக்கப்பட்ட கால அட்டவணை பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் ஊடாக ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது ஒரு முக்கிய நுழைவாயிலாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.