
கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்
எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதால், கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
