கொள்கலன் லொறி ரயில் மோதி விபத்து: பாரிய சேதம் அடைந்த புகையிரதம்

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் இன்று காலை புகையிரத கடவையை கடந்த கொள்கலன் லொறியொன்றுடன் பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் ரயில் சிக்னல்கள், ரயில் கதவுகள், சில்லுகள் மற்றும் இன்ஜினும் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் குறித்த விபத்தால் வடக்கு, மலையக ரயில் சேவையில் தாமதமாக ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் குறித்த பகுதியில் வீதிபோக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

கொள்கலன் லொறி ரயில் மோதி விபத்து பாரிய சேதம் அடைந்த புகையிரதம்

கொள்கலன் லொறி ரயில் மோதி விபத்து பாரிய சேதம் அடைந்த புகையிரதம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்