கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்பவரின் கொலையுடன் சம்மந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.