கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

டெலந்தஹேன பகுதியில், கடந்த வருடம் ஏப்ரல் 18 ஆம் திகதி, 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக, மத்துகம பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

உயிரிழந்த பெண் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.

சந்தேக நபர், இலக்கம் 78/01, இஹலகந்த, அகலவத்தை என்ற விலாசத்தை சேர்ந்த, புஹ்மானகே டென் சனத் ரவிந்த நிலந்த (தேசிய அடையாள அட்டை இலக்கம் 840321401v) என அடையாளம் காணப்பட்டுள்ளார்

பொலிஸார் அவரது பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
071‑8591701 அல்லது 071‑8594381