கொலையில் முடிந்த வாக்குவாதம் : யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்

இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதால் அந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சுன்னாகம் – கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

குறித்த பகுதியில் இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது இதன்போது ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.