கொத்தமல்லி பயன்கள்

கொத்தமல்லி பயன்கள்

கொத்தமல்லி பயன்கள்

🎈உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் இந்த கொத்தமல்லியில் அடங்கியுள்ளது. ஆனால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாட்டில் இந்த கொத்தமல்லி இலையை ஒதுக்கிவைத்து தான் சாப்பிடுவார்கள். இதனுடைய நன்மை பலருக்கும் தெரிவது இல்லை. கொத்தமல்லி இலையில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் இப்பதிவில் கொத்தமல்லி இலையின் மருத்துவ பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.

🥦கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்க காலங்களில் வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இருந்தாலும் இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும்.

🥦கொத்தமல்லியில் உள்ள ஏராளமான அத்தியாவசிய எணணெய்கள், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். இதனால் இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

🥦அதிக காரம் நிறைந்துள்ள உணவுகள் சாப்பிடுவதாலும், பற்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதாலும் வாய்ப்புண் பிரச்சனை ஏற்படுகிறது. கொத்தமல்லி இலையில் வாசனை எண்ணையான சிட்ரோநெல்லா என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள் அதிகமாக நிறைந்துள்ளது. கொத்தமல்லியை அதிகமாக சாப்பிடுவதால் வாய்களில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறவும், சுவாச புத்துணர்ச்சி கிடைக்கவும் உதவுகிறது.

🥦கொத்தமல்லியில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

🥦ஒரு சிலருக்கு காரணமின்றி அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இதற்கு தீர்வாக 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட மூக்கில் வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். சில சமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நின்றுவிடும்.

🥦அனைவருக்குமே கார சாரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு செரிமான கோளாறுகள், வயிறு வலி போன்ற பிரச்சனை வருவது இயல்பு. கொத்தமல்லியானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணித்து வயிறு மற்றும் குடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. கொத்தமல்லி இலையில் நறுமண திரவியம் அதிகமாக இருப்பதால் பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்பிகளை அதிகமாக சுரக்க உதவுகிறது. வயிறு மற்றும் செரிமான சம்மந்தமான அனைத்து பிரச்சனைக்கும் கொத்தமல்லி நல்ல தீர்வினை அளிக்கிறது.

🥦கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன. சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

🥦கொத்தமல்லி இலைக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவைகளை அழிக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் சரும நோய்களை பாதுகாப்பதிலும் கொத்தமல்லி முதலிடத்தை பெற்றுள்ளது. சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான நோய்களான தடிப்பு, சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்பட்டு சருமத்தையே பாழாக்கிவிடும். இது மாதிரியான அலர்ஜி பிரச்சனைக்கு கொத்தமல்லி இலையை அரைத்து அதனுடன் தேன் சேர்த்து தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர அலர்ஜி பிரச்சனை குணமாகும்.

கொத்தமல்லி பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்