கொதிக்கும் பால் பானைக்குள் குழந்தையை மூழ்கடித்த சாமியார்
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பலியா மாவட்டம் ஷ்ரவன்பூர் கிராமத்தில் சாமியார் ஒருவர் பச்சிளம் குழந்தையை கொதிக்கும் பால் பானைக்குள் மூழ்கடித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் பச்சிளம் குழந்தையை பால் பானைக்குள் மூழ்கடித்த பிறகு, பூசாரி குழந்தையை தூக்கி, அதே சூடான பாலை தன் மீதும், குழந்தையின் மீதும் ஊற்றி கொள்கிறார். கொதிக்க கொதிக்க உடலில் பாலை ஊற்றியதுமே, அந்த பச்சிளம் குழந்தை கதறி அழுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியிருப்பதையடுத்து, பொதுமக்கள் பதறிப்போய்விட்டார்கள். கடுமையான கண்டனத்தை சாமியாருக்கு தெரிவித்து வருகிறார்கள். உடனே தூக்கி உள்ளே வைக்குமாறு கோபத்துடன் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுபோன்ற நடைமுறைகள் குழந்தைகளுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பை தந்துவிடும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் வழக்கறிஞர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை இதில் தலையிட வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்துகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையத்திடம் அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
