கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள சோலிங்கன் நகரில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சோலிங்கன் நகரில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வொன்றின் போதே இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக சோலிங்கன் நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்