கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேகநபர் மானிப்பாயில் கைது
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் மானிப்பாயில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயலுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும், யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
