கொடூர தாய்: பிள்ளைகளின் நிலை

அம்பலாங்கொடை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக்குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

முச்சக்கரவண்டியின் சாரதி தன்னிடம் பெண்ணொருவர் வந்து 2 பிள்ளைகளை கொடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் நீண்ட நேரமாகியும் குறித்த பெண் திரும்பி வராததால் பிள்ளைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க தாம் வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து விசாரணை நடத்திய அம்பலாங்கொடை பொலிஸார் தாய்ப்பாலின்றி நோய்வாய்ப்பட்டிருந்த 6 மாத கைக்குழந்தையை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த 2 பிள்ளைகளை நேற்று செவ்வாய்கிழமை இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் அவர்களை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த தாய் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் கூறினர்.

அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்