கொடுக்காப்புளி பயன்கள்

கொடுக்காப்புளி பயன்கள்

கொடுக்காப்புளி பயன்கள்

🟠கொடுக்காப்புளி நம் உடலில் பல நோய்களை தீர்க்கக்கூடிய பழ வகையாகும். கொடுக்காபுளியானது இனிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற மூன்று வகையான சுவை தன்மையினை கொண்டது.  கொடுக்காப்புளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் பி 1, பி 2, பி 16, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் கொடுக்காபுளியை சாப்பிடுவதன் மூலம் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை இப் பதிவில் பார்ப்பலாம்.

🥀நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது இந்த கொடுக்காப்புளி அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டது இது உடலில் இருக்கக்கூடிய வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் இதன் காரணமாக காற்றில் பரவக்கூடியது வைரஸ் மற்றும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

🥀கொடுக்காப்புளி நீரிழிவு நோயை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

🥀கொடுக்காப்புளி பற்களில் ஏற்படும் இரத்த கசிவு, பல் வலி, பல் வீக்கம் போன்ற பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும்.

🥀கொடுக்காப்புளி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் கொண்டது என்பதனால் இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும் மற்றும் இன்ஃப்லம்மேஷன் சொல்லக்கூடிய உட் காயங்களை ஆற்றும் ஆற்றல் கொடுக்காப்புளி உண்டு. இதன் காரணமாக அதனால் உண்டாகக்கூடிய கீல்வாதம் மூட்டுவலி மூட்டு தேய்மானம் போன்ற சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது

🥀கொடுக்காப்புளியில் வயிற்று புண் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நமது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

🥀கொடுக்காப்புளியில் இருக்கும் அதிக நார்ச்சத்துக்கள் உடலில் தேவையில்லாத கொழுப்புகளை அகற்றி உடலை மெலிவாக வைத்திருக்க உதவும். குறிப்பாக உடலில் LDL என்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைவதோடு மட்டும் இல்லாமல், கொழுப்புகள் அளவும் சீராக இருக்கும்.

🥀பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான நோய்கள், குடல் புண் ஆகியவற்றுக்கு கொடுக்காய் புளி நல்ல மருந்து.

🥀செரிமான சம்மந்தப்பட்ட அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு ரொம்ப நல்லது கொடுக்காப்புளி. கொடுக்காபுளியில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மற்றும் பல சத்துக்கள் குடலில் உட்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி தீராத குடற்புண்களை ஆற்றும்.

🥀பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கொடுக்காப்புளியினை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தப்பைகளில் உள்ள கற்கள் முற்றிலும் கரைந்து விடும். அதுமட்டும் இல்லாமல் கல்லீரலை பாதிக்கக்கூடிய மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற வைரஸ் நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

🥀கொடுக்காப்புளி  உடலிற்கு மட்டுமல்லாமல் அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது. கொடுக்காப்புளி விதையினை மை போன்று நன்றாக அரைத்து முகத்தில் தடவி வர சருமத்தில் உள்ள பருக்கள், கருவளையம், தேமல், கருந்திட்டுக்கள், முகச்சுருக்கம் போன்றவை எளிதில் குணமடைய செய்யும்.

கொடுக்காப்புளி பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்