கொங்ரீட் கலவை இயந்திர வண்டிகள் விபத்து: ஒருவர் காயம்

நுவரெலியா – பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திர  வண்டிகள் இரண்டு, இன்று செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டத்தை நோக்கி பயணித்த கொங்ரீட் கலைவை இயந்திர வண்டி பாதையை விட்டு விலகி, மற்றொரு கொங்ரீட் கலவை இயந்திர வண்டியின் மீது விழுந்துள்ளது.

இதன்போது கொங்ரீட் வண்டியின் சாரதி ஒருவர் காயமடைந்து கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்