
கொக்கெய்னுடன் போதை பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது
கொழும்பு – நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையஇ சுங்க பிரிவின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுடன், இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது 2 கிலோவுக்கும் அதிக கொக்கெய்ன் போதைப்பொருளுடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக வந்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த நபர் 7 லட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் அறிவுறுத்தலின் பேரில், போதைப்பொருளை கொள்ளவனவு செய்வதற்காக அவர் குறித்த விடுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
