
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டது
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இன்று ஆரம்பமாகவிருந்த அகழ்வு பணிகளை அடுத்த மாதம் 20ஆம் திகதி முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
