
கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 2 குழந்தைகள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு!
மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
