கைவிடப்பட்ட நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் சத்தம் ஒன்று கேட்டதாகவும், திருடன் என நினைத்து தாங்கள் வீடுகளுக்குள்ளேயே அச்சத்துடன் இருந்ததாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விடிந்ததும் வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியோரம் இருந்த மாதா சுருவத்தோடு மோதிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்