கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு போட்டியொன்று கைவிடப்படும் 8ஆவது முறை இதுவெனவும், 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இவ்வாறு போட்டியொன்று கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் கிரேட்டர் நொய்டா மைதானத்தில் குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சீரற்ற கால நிலை காரணமாக டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களில் எந்தவொரு ஆட்டமும் இடம்பெறவில்லை.
இரண்டாவது நாள் மதியம் நியூசிலாந்து வீரர்கள் ஆடுகளத்திற்கு அடுத்துள்ள வலையில் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்றதைத் தவிர, ஐந்து நாட்களில் எந்த வடிவத்திலும் கிரிக்கெட் நடவடிக்கை இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
