கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு!
கம்பஹா,-படல்கம பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றின் அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து, பெண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் 40 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவராகவும், 5 அடி 06 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், படல்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.